Home /News /tamil-nadu /

திமுக அரசு மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்த அளவிற்கு செயல்படுகிறது : டிடிவி தினகரன்

திமுக அரசு மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்த அளவிற்கு செயல்படுகிறது : டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்பதாக டிடிவி.தினகரன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலளார் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிவி.தினகரன், மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய தி.மு.க அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன.தமிழ்நாட்டு மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து தி.மு.க அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று என பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் அதிரடி கைது!!

    மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ள டிடிவி.தினகரன், எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்யச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்பதாக டிடிவி.தினகரன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Published by:Arunkumar A
    First published:

    அடுத்த செய்தி