ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாகையில் போராடும் மீனவர்களை மீன்வளத்துறை அமைச்சர் ஏன் இன்னும் அழைத்துப் பேசவில்லை? - டி.டி.வி.தினகரன் கேள்வி

நாகையில் போராடும் மீனவர்களை மீன்வளத்துறை அமைச்சர் ஏன் இன்னும் அழைத்துப் பேசவில்லை? - டி.டி.வி.தினகரன் கேள்வி

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

நாகை மீனவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், போராடும் மீனவர்களை மீன்வளத்துறை அமைச்சர் ஏன் இன்னும் அழைத்துப் பேசவில்லை என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் கேட்டு போராடி வரும் மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்கான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

  ஜெயலலிதா மீனவர்களின் நலனுக்காக சாமந்தான் பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் ஜெயலலிதா பெயரால் ஆட்சி நடத்துவதாக வார்த்தைக்கு வார்த்தை கூறும் இவர்களுக்கு இத்திட்டத்தை நிறைவேற்ற மனமில்லாமல் போனது ஏன்?

  Also read: தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு கொரோனா பாதிப்பு

  போராடும் மீனவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண முடியாமல் மீன்வளத்துறையின் அமைச்சர் அப்படி என்ன அதிமுக்கியமான வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்?

  ஜெயலலிதாவின் திட்டங்களை, கொள்கைகளை எல்லாம் புறக்கணிக்கிற பழனிசாமி அரசின் செயல்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனிமேலும் தமிழக மக்களையும் அம்மாவின் உண்மைத் தொண்டர்களையும் இவர்களால் ஏமாற்ற முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Rizwan
  First published:

  Tags: Minister Jayakumar, Nagapattinam, TTV Dinakaran