Home » News » Tamil-nadu » AMMK SECRETARY THANGA TAMILSELVAN SAYS ADMK BJP ALLIANCE HAS BEEN CONFIRMED 3 MONTHS AGO

அதிமுக - பாஜக கூட்டணி 3 மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது: தங்க தமிழ்ச்செல்வன்

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என தெரிந்தும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறது என்று தங்க தமிழ்செல்வன் விமர்சித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி 3 மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது: தங்க தமிழ்ச்செல்வன்
தங்க தமிழ்செல்வன்
  • News18
  • Last Updated: February 6, 2019, 11:21 AM IST
  • Share this:
அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி 3 மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேசுகையில் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என தெரிந்தும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

மேலும், அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணி 3 மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


எடப்பாடியுடன் பிரதமர் மோடி.


தொடர்ந்து பேசிய தங்க தமிழ்செல்வன், மாநில உரிமைகளின் நலனை காக்க தேசிய கட்சிகளோடு அமமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்றும், மாநில கட்சிகளோடு மட்டுமே அமமுக கூட்டணி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவுடன் அமமுகவிற்கு போட்டி கிடையாது. திமுக கூட்டணிக்கு எதிராகத்தான் அமமுக தேர்தலில் போட்டியிடும் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.Also see...

First published: February 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading