ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"இருக்கும் கொஞ்சம் பேரையும் இழந்து விடாதீர்கள்” - அமமுகவில் கிளர்ச்சிக்கொடி தூக்கிய புகழேந்தி பரபரப்பு பேட்டி

"இருக்கும் கொஞ்சம் பேரையும் இழந்து விடாதீர்கள்” - அமமுகவில் கிளர்ச்சிக்கொடி தூக்கிய புகழேந்தி பரபரப்பு பேட்டி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அமமுக என்னுடைய உழைப்பால் வளர்ந்த கட்சி என்றும் சசிகலா வந்த பின்னர் தற்போதைய நிலை மாறும் என்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகி புகழேந்தி கூறியுள்ளார்.

அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலா ஆதரவாளராக இருந்து அமமுகவில் இணைந்த இவர் தற்போது, தினகரன் கருத்து வேறுபாடு காரணமாக நெருக்கமாக இல்லை என்று கூறப்படுகிறது.

புகழேந்தியை விமர்சிக்கும் வகையில் அமமுகவின் ஐடி விங் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது. இதனால், அவர் தினகரனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

வேறுகட்சிக்கு அவர் செல்ல இருக்கிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில், நியூஸ் 18-க்கு பேட்டியளித்த புகழேந்தி கூறுகையில், “தினகரனுக்கு நிர்வாகத் திறன் இல்லை என்பதை இந்த இடத்தில் இருந்து கொண்டு நான் சொல்ல முடியாது.

வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. அதை தினகரன் தான் முடிவு செய்ய வேண்டும். தினகரன் என்னை போ என்றால், சசிகலா என்னை வா என்பார்.

சசிகலா வந்த பின்னர் நிலைமை மாறும், விடை கிடைக்கும். தினகரனின் நிர்வாகத்திலும்,நிலைப்பாட்டிலும் மாற்றம் தேவை. கட்சியில் இருக்கும் கொஞ்சம் பேரையும் இழந்து விடக்கூடாது.

கோவையில் நான் பேசியது உண்மைதான். ஆனால்

எடிட் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் ஐ.டி பிரிவு தான் எனக்கு எதிராக செயல்பட்டுள்ளது. என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து அவர்கள் விரலைக் கொண்டு கண்ணை குத்தியுள்ளனர். என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்கு தான் பேரிழப்பு” என்று கூறியுள்ளார்.

புகழேந்தி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ஒருவராவார். குறிப்பாக சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலிதா சிறை சென்று ஜாமினில் வெளி வந்தபோது, செலுத்தப்பட்ட உத்தரவாத பணத்தொகைக்காக புகழேந்திதான் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Sankar
First published:

Tags: AMMK, Sasikala, TTV Dhinakaran