ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசுப் பேருந்தில் செல்லும் பெண்களை ஏளனமாக பேசக்கூடாது என்பது அமைச்சர்களுக்கு பொருந்தாதா? – டிடிவி தினகரன்கேள்வி

அரசுப் பேருந்தில் செல்லும் பெண்களை ஏளனமாக பேசக்கூடாது என்பது அமைச்சர்களுக்கு பொருந்தாதா? – டிடிவி தினகரன்கேள்வி

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது- டிடிவி தினகரன்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அரசுப் பேருந்தில் செல்லும் பெண்களை ஏளனமாக பேசக்கூடாது என்பது அமைச்சர்களுக்கு பொருந்தாதா? என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவில் பெண்கள் மத்தியில் பேசும் பொன்முடி, ‘இப்போ பஸ்ல எப்டி போறீங்க? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல போறீங்க’ என்று பொன்முடி பேசியுள்ளார்.

  அவரது பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களுக்கு புரியும்படியான மொழியில் அமைச்சர் பேசுகிறார் என திமுக ஆதரவாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

  ’அவருக்கு வரலாறும் தெரியல ; அரசியலும் தெரியல’ - அண்ணாமலையை சாடிய அமைச்சர் பொன்முடி..!

  இந்நிலையில் அமைச்சரின் பேச்சை டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

  அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது.

  பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா?

  மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?! என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: MK Stalin, TTV Dinakaran