ஓமைக்ரான் பரவலை காரணம் காட்டி எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கும் திமுக அரசு, உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சில தினங்களுக்கு முன்பு சசிகலா மற்றும் டிடிவி. தினகரன் ஆகிய இருவரும் தனித்தனியாக காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். எனினும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அனுமதி அளிக்க காவல்துறை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில், திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?
ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ.
இதையும் படிங்க: பொன்னேரியில் பெரியார் சிலை சேதம்
இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது ; மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்’ என்று விமர்சித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.