ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் 40 இடங்கள் கேட்டேன்... ஆனால்...? - டிடிவி தினகரன் ஓபன் டாக்!

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் 40 இடங்கள் கேட்டேன்... ஆனால்...? - டிடிவி தினகரன் ஓபன் டாக்!

டி.டி.வி தினகரன் பேட்டி

டி.டி.வி தினகரன் பேட்டி

69% இடஒதுக்கீட்டை பாதிக்காத வகையில் 10% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் ஒரு அணிலைப்போல் அமமுக பங்கு இருக்கும் என அக்கட்சியின்  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  கட்சிக்கான பிரத்யேக இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர்  செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து டிடிவி தினகரன் பேசுகையில், திமுகவை எதிர்ப்பதற்காக வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் அல்லது எந்த ஒரு தேர்தலிலும் கூட்டணி அமைப்போம்.  ஆனால் அதிமுக என்ற கட்சி செயல்படாத நிலையில் உள்ளது . தேர்தல் வந்தால் ஒரு கட்சிக்கு A மற்றும் B பார்ம் தர வேண்டும் இன்று அதிமுகவின் நிலைமை மோசமாக உள்ளது. என விமர்சித்தார்.

அதேநேரம் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை அதிமுக பற்றி பேசுவதற்கு கருத்து ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.

இருப்பினும் இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் ஒரு அணில் போல அமமுக செயல்படும் என்றார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், "ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்ற பேரறிஞர் அண்ணாவின் நிலைப்பாடே அமமுகவின் நிலைப்பாடு. சனாதனம், பாரத், அரசமைப்பு சட்டத்தை விட பெரியது பாரத் என்றெல்லாம் ஆளுநர் பேச வேண்டியதில்லை. வேறு வேலையில்லாமல் ஆளுநர் பேசுகிறார். அவர் பேசுவதை அவர் வீட்டில் உள்ளவர்களே கேட்கமாட்டார்கள்" என்றார்.

10 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமல்படுத்தப்பட வேண்டும்.’ என்றார்.

தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணியில் இணைய தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ’கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி செல்ல நான் தயாராகவே இருந்தேன். அந்த தேர்தலில் 40 இடங்கள் கேட்டேன். ஆனால் அவர்கள் கொடுக்க தயாராக இல்லை. குறிப்பாக கட்சியில் உள்ள சிலர் பதவி ஆசையால் அது நடக்காமல் போய்விட்டது’ என்று பதிலளித்தார்.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் ஒரு அணிலைப்போல் அமமுக பங்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Published by:Lakshmanan G
First published:

Tags: OPS - EPS, TTV Dhinakaran