• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தலை கண்டு ஸ்டாலின் பயப்படுகிறார்: டிடிவி. தினகரன்

தேர்தலை கண்டு ஸ்டாலின் பயப்படுகிறார்: டிடிவி. தினகரன்

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    திருப்பரங்குன்றம் தேர்தலை கண்டு ஸ்டாலின் பயப்படுகிறார் என்று அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.

    அரவக்கறிச்சி தொகுதி உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவிற்கு துணிச்சல் இருந்தால் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    "நம் நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா அல்லது அதிபர் ஆட்சி நடக்கிறதா " என்று கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன், "எத்தனையோ மழை காலங்களிலும் புயல் காலங்களிலும் தேர்தல் நடந்திருக்கிறது என்றும் கூறினார். அமமுக இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. இடைத்தேர்தல் நடத்தப்படாததற்கு சொல்லப்படும் காரணங்களைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள். அமைச்சர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் தெரியாமல் தலைமைச் செயலாளர் தானாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

    மேலும் "துணைவேந்தர் நியமன முறைகேடு குறித்து பேசும் ஆளுனர், திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கட்ட சாஸ்த்ரா பல்கலைகலகத்தின் விழாவில் பங்கேற்றது நியாயமா என்று கேள்வி எழுப்பினார். ஓபிஸ் என்னை திருத்துவதற்காகத்தான் சந்தித்தார் என்றாள் அவர் என்ன புத்தபிரானா?" என்றும் டிடிவி.தினகரன் கிண்டலடித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: