ஆர்.பி. உதயகுமார் கடந்த 5 ஆண்டுகளாக டெலிபோன் பில் கட்டவில்லை: வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய அமமுக மனு

ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடந்த ஐந்து ஆண்டுகளாக டெலிபோன் கட்டணம் செலுத்தாததால் இந்த தகவலை தன் வேட்புமனுவில் மறுத்ததால் மனுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுத்தார்

 • Share this:

  தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஏற்கனவே இருந்த சாத்தூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தான் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 17 ஆயிரத்து 393 ரூபாயை செலுத்தவில்லை. இந்த தகவலை தன் வேட்புமனுவில் மறைத்து உள்ளார் ஆதலால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சௌந்தர்யாவிடம் மனு கொடுத்தார்.

  இதனைத்தொடர்ந்து செய்தியாளரிடம் அமமுக கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் கூறுகையில், அதிமுக வேட்பாளர் சாத்தூரில்  டெலிபோன்பில் தற்போதுவரை கட்டவில்லை. இது தொடர்பான ஆவணங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்துள்ளோம். மறுபரிசீலனை என்று தெரிந்திருந்தால் அன்று தகுதி நீக்கம் செய்திருப்போம்.

  Must Read : தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பின் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் பதில்

  அதிகாரிகளும் அதற்கான ஆவணங்களை அதிமுக வேட்பாளர் சமர்பிக்கவில்லை என  தெரிவித்துள்ளனர். அதற்கு ‘மக்கள் போடும் வாக்கு வேஸ்ட்’ என்றும், ’வாக்குக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்’ எனவும் தெரிவித்தார்.

  - செய்தியாளர் : சிவக்குமார் தங்கையா
  Published by:Suresh V
  First published: