நோட்டா உடன் தொடர்ந்து 2 தேர்தலில் தோல்வியடைந்த அமமுக... வேட்பாளர்கள் அதிருப்தி

நோட்டா உடன் தொடர்ந்து 2 தேர்தலில் தோல்வியடைந்த அமமுக... வேட்பாளர்கள் அதிருப்தி

டி.டி.வி.தினகரன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

 • Share this:
  ஓசூர் சட்டமன்ற தேர்தலில் அமமுக வேட்பாளர் மாரேகவுடா நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றது தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட்டு நேற்று கிருஷ்ணகிரி தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட்டன. ஓசூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட  மேற்கு மாவட்ட செயலாளர் மாரேகவுடா போட்டியிட்டார்.

  வாக்கு எண்ணிக்கையின் அனைத்து சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் ஓசூர் தொகுதியில் நோட்டாவிற்கு 1976 வாக்குகள் கிடைத்தன. நோட்டாவை விட அமமுக கட்சி வேட்பாளர் 1170 வாக்குகள் பெற்று பின்தங்கியது. குறிப்பாக அமமுக கட்சி தேமுதிக உடன்  கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  இதுப்போன்று சென்ற 2019ஆம் ஆண்டு ஓசூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பெங்களூரை சேர்ந்த புகழேந்தி அவர்கள் களத்தில் நிறுத்தப்பட்டார். அவர் ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள் 1432 தான.  அப்போது பதிவான நோட்டா வாக்குகள் 4262. நோட்டாவிடம் 2830 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் நோட்டா விடம் அமமுக தோல்வி அடைந்து தொடர்கதையாக இருப்பதால் ஓசூர் அமமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vijay R
  First published: