• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திண்டுக்கல் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..

திண்டுக்கல் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..

அம்முக பிரமுகர் கைது

அம்முக பிரமுகர் கைது

திண்டுக்கல்லில், அமமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உறவினரே தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

  • Share this:
    திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை அடுத்த கொல்லம்பட்டியைச் சேர்ந்தவர் 33 வயதான கலையரசன். ஷேர் ஆட்டோ ஓட்டுநரான இவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் ஒ்ன்றிய இளைஞர் அணி செயலாளராக இருந்தார். ஜனவரி 30ம் தேதி இரவு வழக்கம் போல் உத்தனம்பட்டிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

    உத்தனம்பட்டி அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள், திடீரென கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் ஷேர் ஆட்டோவைத் தாக்க பயணிகள் அலறி ஓடியுள்ளனர். பீதியடைந்த கலையரசனும் தப்பி ஓட முயன்றபோது அவரை ஓட ஓட விரட்டி அந்த மர்ம கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.

    இந்த வழக்கில், வெள்ளோடு அருகே பதுங்கியிருந்த கலையரசனின் உறவினர் ஐயப்பன், அவரது நண்பர்கள் சொக்கன், நாகராஜ், பாலமுருகன் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.

    கலையரசன் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் நட்பாகப் பழகி வந்தது ஐயப்பனுக்குப் பிடிக்கவில்லை; அவர்களிடம் இருந்து விலகும்படி கலையரசனை எச்சரித்தார். ஆனால் கலையரசன் அதைக் கேட்கவில்லை. 20 நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில், ஐயப்பனின் கையில் கலையரசன் நண்பர்கள் வெட்டி விட்டனர்; இதுதொடர்பாக சண்டை ஏற்பட்டு பின்னர் சுமுகமாக முடிந்தது.

    இந்நிலையில், ஐயப்பனின் நண்பனான சொக்கனை அழைத்த கலையரசன், ஐயப்பனை ‘ஒழுங்காக இருக்கச் சொல்’ என்று கூறி மிரட்டி அடித்து அனுப்பினார். இதையறிந்த ஐயப்பன் ஆத்திரமடைந்து தன்னை கலையரசன் கொலை செய்யும் முன்பு, தான் அவரைக் கொலை செய்ய வேண்டும் என நண்பர்களுடன் சேர்ந்து முடிவு செய்தார் ஐயப்பன்.

    மேலும் படிக்க...கொஞ்சம் சஸ்பென்ஸ் இருக்கட்டும்: சசிகலா குறித்து டிடிவி தினகரன்

    அதன்படி ஜனவரி 30ம் தேதி ஆட்டோ ஓட்டி வந்த கலையரசனை, 4 பேரும் சேர்ந்து படுகொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. கொலை குற்றவாளி ஐயப்பன் மீது 2007ஆம் ஆண்டு தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் ஒரு கொலை வழக்கும், 2018 ம் ஆண்டு ஆத்தூர் ஒக்கலிங்கபுரத்தில் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

     

    நட்பு வட்டாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை, அமமுக பிரமுகர் கொலையில் முடிந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: