அம்மா இருசக்கர வாகனம், இலவச லேப்டாப் திட்டங்களின் நிலை என்ன?

அம்மா இருசக்கர வாகனம் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்தது.

  • Share this:
    அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சில திட்டங்களை மறுசீரமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    வேலைக்கு போகும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனத்தின் விலையில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 மானியமாக வழங்கப்பட்டு வந்தது.

    அம்மா இருசக்கர வாகனம் திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்தது. மார்ச் 2020 வரை இந்த திட்டத்தின் கீழ் 2.07 லட்சம் வாகனங்கள் ரூ.468.75 கோடி செலவில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை திமுக அரசு கைவிட உள்ளதாக கூறப்படுகிறது.

    Also Read : தமிழகத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
     மாநகர பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதால் இருசக்கர வாகன திட்டம் கைவிட உள்ளதாக   கூறப்படுகிறது.. மாநகர பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தின் கீழ்,  703 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


    இதேப்போன்று மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக மடிக்கணிகள் வழங்கும் முந்தைய அரசு திட்டத்திற்கு பதிலாக மாணவர்களுக்கு 670 கோடி ரூபாய் மதிப்பில் டேப் வழங்கும் திட்டம் அரசாங்கம் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சார்ந்த 5.6 மில்லியன் ஏழை எளிய குடும்பங்கள் நலனுக்காக முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: