• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அம்மா இருசக்கர வாகன திட்டம் என்னாச்சு? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

அம்மா இருசக்கர வாகன திட்டம் என்னாச்சு? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்

அம்மா இருசக்கர வாகன திட்டம்

அம்மா இருசக்கர வாகன திட்டம்

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்துள்ளனர்.

  • Share this:
பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் அறிவித்திருப்பதால் மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்திற்கு போதிய வரவேற்பில்லை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

ஊரகவளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அதிமுக ஆட்சிகாலத்தில் கொண்டுவரப் பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். அப்போது பேசிய வேலுமணி பணிக்கு செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்ததாகவும் அந்த திட்டம் குறித்து நிதிநிலை அறிகையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை எனவும் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.

Also Read : பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா

அதற்கு பதிலளித்து பேசிய ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருவதாகவும் பேசினார்.

Also Read : சிங்கார சென்னை 2.O திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள்

மேலும் கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்திற்கு போதிய வரவேற்பு இல்லை என்றும் அத்திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவில்லை என்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே ஆர் .பெரியகருப்பன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: