Home /News /tamil-nadu /

அம்மா இரு சக்கர வாகனங்கள் பெற புதிய விதிகள்!

அம்மா இரு சக்கர வாகனங்கள் பெற புதிய விதிகள்!

அம்மா ஸ்கூட்டர்

அம்மா ஸ்கூட்டர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
அம்மா இருசக்கர வாகன திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, பயனாளிகளின் வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் வகுக்கப்பட்டது. அதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது.  இந்த நிலையில் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர், மாவட்ட ஆட்சியர்களின் கருத்துகளைக் கேட்டு அரசுக்கு கருத்துரு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டியில் சில திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை முன்மொழியப்பட்டது.

அதை ஏற்று சில திருத்தங்களை மேற்கொண்டு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தத் திட்டத்தின் பயனாளிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழகத்தில் வசிக்கும் 18 முதல் 40 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று முன்பிருந்த விதி தளர்த்தப்பட்டு, 45 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று மாற்றப்படுகிறது. பயனாளி 8-ம் வகுப்பு தேர்வை எழுதியிருக்க வேண்டும் என்ற பிரிவு ரத்து செய்யப்படுகிறது.

மேலும், அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், சமையல்காரர் மற்றும் உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் பெண்கள் போன்ற சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் வரும் பெண்களின் (திட்ட பயனாளிகள்) ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை மிகாமல் இருக்க வேண்டும்.

இதே நிலைக்கு உள்படும், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண்களும் திட்ட பயனாளிகளாக முடியும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Published by:Yuvaraj V
First published:

Tags: Amma Scooter

அடுத்த செய்தி