சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்ட முக்கிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று 15 பேர் அடங்கிய அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கின்றது. அதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமமுக துணை தலைவருமான எஸ்.அன்பழகன் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
அதேபோல, அமமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். இதே போல பலரும் போட்டியிட உள்ளனர்.
இதில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 4 எம்.ல்.ஏ-க்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
Must Read : 174 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டி...187 இடங்களில் களம்காணும் உதயசூரியன்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 12 ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.