அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சையில் முகாமிட்டுள்ள டிடிவி தினகரன், நேற்றிரவு உணவு உட்கொண்டதில் ஒவ்வாமை (Food Poison) ஏற்பட்டதன் காரணமாக தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் நேற்றிரவே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு உட்கொண்டதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அமமுக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thanjavur, TTV Dinakaran