• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும்: எல்.முருகன்

அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும்: எல்.முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். 

  • Share this:
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், நிச்சயமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகின்ற பொழுது பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றார். அமித்ஷாவுடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில முக்கிய நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் பங்கேற்பர் என தெரிவித்தார். அத்துடன் அந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொள்வாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக தலைவர் முருகன், ”இதுகுறித்து நான் கருத்து கூற இயலாது. கூட்டணி குறித்த ஆலோசனை பற்றி அமித் ஷா தெரிவிப்பார்” என கூறினார்.

மேலும்,” அமித்ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உத்தரப்பிரதேசம் சென்றார். அங்கு ஆட்சி ஏற்படுத்தினார். அதேபோல் அவர் செல்லும் மாநிலங்களில் பாஜக ஆட்சியை ஏற்படுத்துகிறார். எனவே அவர் தமிழகம் வருவது பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல பலருக்கு பயத்தை கொடுக்கிறது” என பாஜக தலைவர் முருகன் கூறினார்.

மேலும் படிக்க...ரஜினியை சந்திக்கிறாரா அமித்ஷா?


மத்திய அரசு சார்பில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பார்கள் என தெரிவித்தார். மேலும் அவர் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரவில்லை எனவும் கூறினார். அமித்ஷா வருகை இருப்பதால் 21ஆம் தேதி ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறவிருந்த வேல் யாத்திரை நிகழ்ச்சி ஒரு நாள் தள்ளி வைக்கப்படுகிறது என்பது குரிப்[பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: