ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக அரசியல் தலைமைக்கான வெற்றிடத்தை பாஜக நிரப்ப வேண்டும்: அமித்ஷா விருப்பம்!

தமிழக அரசியல் தலைமைக்கான வெற்றிடத்தை பாஜக நிரப்ப வேண்டும்: அமித்ஷா விருப்பம்!

பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை

பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து தமிழக பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பாஜகவினர் அடுத்த 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என தமிழக பாஜக நிர்வாகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா பேசியுள்ளார்.

  சென்னைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டு பவள விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். உலகின் மிக மூத்த, பழைமையான மொழி என்றும் தமிழ் மொழியின் பெருமை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பெருமை என கூறினார்.

  தமிழில் மருத்துவக்கல்வி, பொறியியல் கல்வியை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசிய அமித்ஷா தமிழில் உரிய பாடத்திட்டங்களை அமைக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றார். மருத்துவம் பொறியியல் படிப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர் . இதனால் தாய்மொழியில் உயர்கல்வி படிப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுகொண்டுள்ளார். தமிழகம் மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி வருவதாகவும், தமிழகத்தின் வளர்ச்சியை கூர்ந்து பிரதமர் மோடி கவனிக்கிறார் என அமித் ஷா பேசினார்.

  இந்த நிகழ்ச்சியில் முடித்த பின்னர் சென்னை தியாகராஜ நகரில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்திற்கு சென்றார். பின்னர் தமிழக அரசு பாஜக நிர்வாகிகள் மீதான பொய் வழக்குகள், மற்றும் தமிழக அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர்கள் போல திமுகவினரின் அட்டூழியங்களுக்கு துணை போவது குறித்த புகாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பாஜக மாநில நிர்வாகிகள் வழங்கினர். இதனையடுத்து தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினர்.

  இதையும் படிங்க: இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 84 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக அடிப்படை உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க உழைக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதாக அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும் பாஜகவினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என நிர்வாகிகளுடன் பேசினார். மேலும் தமிழகத்தில் அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது எனவும் அதனை பாஜக நிரப்ப வேண்டும் எனவும்  ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Amith shah, BJP