சென்னை வரும் அமித்ஷாவை வரவேற்க சிறப்பு ஏற்பாடு உடன் பலத்த பாதுகாப்பு

Amit Shah | டெல்லியில் இருந்து  காலை 10:30க்கு புறப்படும் அமித்ஷா பிற்பகல் 1:40க்கு சென்னை விமானநிலையம் வருகிறார்

சென்னை வரும் அமித்ஷாவை வரவேற்க சிறப்பு ஏற்பாடு உடன் பலத்த பாதுகாப்பு
அமித் ஷா
  • News18 Tamil
  • Last Updated: November 21, 2020, 12:46 PM IST
  • Share this:
நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறை தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா-விற்கு வரவேற்பு கொடுக்க சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் 6ஆம் நுழைவாயில் முகப்பு பகுதியில் அமித்ஷாவை வரவேற்க பிரம்மாண்ட முகப்பு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது, கரும்பு, வாழை மரம், பழங்களை கொண்டு இந்த அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் மீனம்பாக்கம் சாலை முழுவதும் பாஜக சார்பில் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து  காலை 10:30க்கு புறப்படும் அமித்ஷா பிற்பகல் 1:40க்கு சென்னை விமானநிலையம் வருகிறார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க தமிழக பாஜக மற்றும் தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்கமாக செல்லும் அமித்ஷா ராஜாஅண்ணாமலை புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.


இதனையொட்டி அந்த பகுதி முழுவதும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அதன் பின்னர் கலைவானர் அரங்கில் நடைபெறவிருக்கும் அரசு நிகழ்ச்சியிலும் இன்று மாலை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கிறார். இன்று இரவு மீண்டும் தனியார் விடுதியில் ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 10மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading