சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி அமித்ஷா

சென்னை கலைவாணர் அரங்கத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி அமித்ஷா
அமித்ஷா
  • Share this:
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழக வந்துள்ளார். இன்று காலை 10.50 மணிக்கு டெல்லியிலிருந்து தனிவிமானத்தில் சென்னை புறப்பட்டார். மதியம் 2 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். தமிழகம் வந்த அமித்ஷாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று வரவேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

விமானநிலையத்திலிருந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் சென்றார். அப்போது வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சாலையோரம் இருந்த பாஜக தொண்டர்களை பார்த்த அமித்ஷா காரிலிருந்து இறங்கினார். பின் தொண்டர்களை நோக்கி கை அசைத்தவாறு சாலையில் நடந்து சென்று அவர்களை உற்சாகப்படுத்தினார். அதனையடுத்து, 4.50 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்திலுள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமித்ஷா அங்கு சென்றார். அங்கு சென்ற அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமித்ஷாவுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு விநாயகர் சிலை பரிசு வழங்கினார். அதேபோல, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நடராஜர் சிலையை அமித்ஷாவுக்கு பரிசாக வழங்கினார்.

அதனையடுத்து, கண்ணன்கோட்டை, தேர்வாய்கண்டிகையில் 380 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நீர்தேக்கத்தை அமித்ஷா நாட்டுக்கு அர்பணித்தார். அதன்பிறகு, சென்னை தொடங்கப்படவிருக்கும் 61,843 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.


கோவை-அவிநாசி சாலையில் 1,620 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்மட்டச் சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இன்னும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading