எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல நலத் திட்டங்களை செயல்படுத்துவோம்! அமித் ஷா உருக்கம்

விமானி அபிநந்தனை நினைத்தும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நினைத்தும் எனது உரையைத் தொடங்குகிறேன்.

news18
Updated: April 2, 2019, 4:33 PM IST
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல நலத் திட்டங்களை செயல்படுத்துவோம்! அமித் ஷா உருக்கம்
தூத்துக்குடி கூட்டத்தில் அமித் ஷா
news18
Updated: April 2, 2019, 4:33 PM IST
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தியதைப் போல வரும் ஐந்து ஆண்டுகளில் பா.ஜ.க அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தும் என்று உறுதி அளிக்கிறேன் என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘கனிமொழியை வெல்லக் கூடிய சக்தி தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு மட்டுமே உள்ளது.


தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு உங்களது ஆதரவும் ஆசிர்வாதமும் வேண்டும். விமானி அபிநந்தனை நினைத்தும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நினைத்தும் எனது உரையைத் தொடங்குகிறேன்.

ஸ்டாலின் - முதலமைச்சர்: அனல் பறக்கும் பிரசாரம்

தமிழகத்துக்காக பா.ஜ.க அரசு இரண்டு மத்திய அமைச்சர்களை வழங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் மிகப் பெரிய கூட்டணியை அமைத்துள்ளோம். பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

Loading...

குண்டு வீசித் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானை பழிவாங்க வேண்டுமா? வேண்டாமா? வரும் காலங்களில் தமிழகத்தின் வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவோம்.

இந்தியாவின் வில்லன் மோடி - உதயநிதி ஸ்டாலின்

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து தரப்பு மக்களும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றனர். மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் கட்டாயம் ஆட்சி அமைக்கும்.

தி.மு.க சார்பில் கனிமொழி, ஆ.ராசா தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி 12 லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளது’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...