தேர்தல் பிரச்சாரத்துக்காக நாகர்கோவில் வந்தடைந்த அமித்ஷா

தேர்தல் பிரச்சாரத்துக்காக நாகர்கோவில் வந்தடைந்த அமித்ஷா

அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.கவின் மூத்த தலைவருமான அமித்ஷா நாகர்கோவிலில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டிவருகின்றன. தி.மு.க, அ.தி.மு.கவும் அதனுடைய பெரும்பாலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளன. தொகுதி பங்கீட்டு பணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, இன்று தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகளுக்கு முக்கிய நாளாக உள்ளது. தி.மு.க சார்பில் திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் இன்று வேட்பாளர்கள் அறிமுகப்படுகின்றன. பா.ஜ.கவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.

  விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அமித்ஷா அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் தனி ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். அங்கிருந்து காரில் சுசீந்திரத்திலுள்ள பழமையான தாணுமாலய சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர், பத்தே முக்கால் மணிக்கு, சுசீந்திரத்தில் வெற்றிக் கொடியேந்தி வெல்வோம் என்ற பெயரில் பா.ஜ.க நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறார்.

  அதனையடுத்து, நீலவேணி அம்மன் கோயிலில் பூரண கும்ப மரியாதையைப் பெற்றுக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து பேரணியில் பங்கேற்கும் அமித்ஷா, வேப்பமூடு சந்திப்பிலுள்ள காமராஜன் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர், மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தவுள்ளார் என்று தெரிகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: