கரூர் மாவட்டத்தில் பா.ஜ.க தொண்டரின் சிறிய உணவகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்கார்ந்து உணவு உண்டார். அதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைமுன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுழண்டு சுழண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தேசியத் தலைவர்களும் தமிழ்நாட்டு வந்து தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்துவருகின்றனர்.
இன்று பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கரூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேலாயுதம்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை முடித்து விட்டு கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள பாஜக தொண்டர் ரவியின் உணவு விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தோசை சாப்பிட்டார். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் தான் மணவாசி சுங்கச்சாவடியில் 3 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் பொதுமக்கள், பயணிகள் பாதிக்கப்பட்டனர். அமித்ஷா மணவாசி டோல் தாண்டி சென்றும் பொதுமக்களின் வாகனங்களை விடவில்லை. இதனால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதிப்படைந்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.