குஷ்புக்கு ஆதரவாக சென்னையில் இன்று அமித்ஷா பிரச்சாரம்

குஷ்புக்கு ஆதரவாக சென்னையில் இன்று அமித்ஷா பிரச்சாரம்

அமித் ஷா

மத்திய அமைச்சர் அமித்ஷா, இன்று சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

  • Share this:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குறிப்பாக மாநில தலைவர்களும், தேசிய தலைவர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புக்கு ஆதரவாக பிரச்சாம் மேற்கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து அவர் திறந்த வேனில் பாண்டிபஜார் நோக்கி பேரணியாக செல்கிறார். வழியில், அதிமுக-பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமித்ஷா பிரச்சாரம் செய்கிறார்.

பின்னர், விமான நிலையம் செல்லும் அமித்ஷா, அங்கிருந்து தூத்துக்குடி செல்கிறார். அங்கே ராமநாதபுரம், திருநெல்வேலியில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளார்.

Must Read : தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்நிலையில், அமித்ஷா வருகைகையை ஒட்டி திருநெல்வேலியில் 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Published by:Suresh V
First published: