தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகத்தில் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கின்றனர்.
அதன்படி, இம்மாதம் 7 ஆம் தேதி தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். கடந்த 28 ஆம் தேதி விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நிலையில் மீண்டும் வர இருக்கிறார் அமித்ஷா.
அதேபோல, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இம்மாதம் 10ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார். அவர், தஞ்சாவூரில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இந்தநிலையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுகவும், பாஜகவும் இன்று, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amith shah, BJP, Bjp campaign, Election 2021, TN Assembly Election 2021