ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிக் பாஸ் அமீர் தனது தாயுடன் இருக்கும் புகைப்படம்.. கலங்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் அமீர் தனது தாயுடன் இருக்கும் புகைப்படம்.. கலங்கும் ரசிகர்கள்!

அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நடனம் கற்று கல்லூரி கலை நிகழ்ச்சியில் முதல் பரிசும் வென்றுள்ளார்.

அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நடனம் கற்று கல்லூரி கலை நிகழ்ச்சியில் முதல் பரிசும் வென்றுள்ளார்.

அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நடனம் கற்று கல்லூரி கலை நிகழ்ச்சியில் முதல் பரிசும் வென்றுள்ளார்.

  • 2 minute read
  • Last Updated :

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கி 80 நாட்களை கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகும் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும் வைல்டு கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் மற்றும் அமீர் வந்துள்ளனர்.

இந் தநிகழ்ச்சியில் இருந்து இதுவரை 10 பேர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது பிரியங்கா, ராஜு, பாவ்னி, வருண், அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய 10 போட்டியாளர்கள் உள்ளனர்.

read more.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஐஸ்வர்யாவை பார்த்து பொறாமை படும் மீனா!

இவர்கள்  அனைவரும் தங்களது வாழ்க்கை குறித்து கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசியுள்ளனர். இதனால் தற்போது வந்துள்ள அமீர் மற்றும் சஞ்சீவிற்கும் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி நேற்றைய நிகழ்ச்சியில் அமீர் தனது கடந்து வந்த பாதை குறித்து பேசினார். அப்பா இல்லாமல் அண்ணன் மற்றும் அம்மாவுடன் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தது குறித்து பேசினார். தனது பள்ளி படிப்பின் போது அம்மா கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் அவரை தகனம் செய்ய கூட வீட்டில் இருந்த சில பொருட்களை விற்றதாக அமீர் பேசியதை கேட்டு சக ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களும் கண்ணீர் விட்டனர். பின்னர் ஒரு ஹோட்டலில் ரூம்பாயாக பணி புரிந்து கொண்டே தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நடனம் கற்று கல்லூரி கலை நிகழ்ச்சியில் முதல் பரிசும் வென்றுள்ளார். அதன்பின்னர் இனிமேல் டான்ஸ்தான் தனது எதிர்காலம் என்று முடிவு செய்து தனது ராணுவ ஆசையைக் கைவிட்டதாக கூறினார். மேலும் ஒரு சாதாரண மண் மண்டபம் ஒன்றில் டான்ஸ் க்ளாஸ் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

அங்கு முதன் முதலில் மாணவிகளாக வந்த இரண்டு சிறுமிகள் தான் எனது வாழ்க்கையை திருப்பி போடுபவர்கள் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை என உருக்கமாக பேசிய அமீர், அந்தக் குழந்தைகள் தான் தற்போது எனக்கு எல்லாமே என்றார்.

read more.. Amir : பிக் பாஸ் அமீர் வாழ்க்கையை மாற்றிய குழந்தைகள்.. காலில் விழும் வீடியோ வைரல்!

மேலும் விடாமல் நடனமாடி லிம்கா விருதையும் வென்றுள்ளார். அந்த போட்டி நிறைவடைந்த பின்னர் அமீர் மயக்கமடைந்துள்ளார். அப்போது அமீரை மருத்துவமனையில் சேர்த்த அவரது மாணவிகளின் தந்தை அமீரின் பின்னணியை விசாரித்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று ‘இனி நீ எங்களில் ஒருவன்’ என்று குடும்பத்தில் ஒருவராக அரவணைத்துள்ளார்.

நான் அங்கு செல்லும் போது தான் முதன்முதலில் டைல்ஸ் வைத்த வீட்டில் காலடி எடுத்து வைத்தேன் என அமீர் பேசியது அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. தற்போது டான்ஸர் ஆனது  மூலம் என் அம்மாவின் கனவை நிறைவேற்றி விட்டேன். லோக்கல் சானலில் ஆடிக் கொண்டிருந்தவனுக்கு பிக்பாஸ் என்னும் பெரிய மேடை கிடைத்திருக்கிறது.

ஆனால் இதைப் பார்க்க என் அம்மா இல்லை என அமீர் தனது கதையை நிறைவு செய்த போது ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அழுதுகொண்டே அவரை கட்டியணைத்து சமாதானப்படுத்தினர். அமீர் தனது வாழ்க்கை குறித்து பேசுகையில் என் அம்மா அழகாக இருப்பார், என்னை போல இருக்க மாட்டார், அவர் நல்ல கலர் என கூறி இருந்தார். இந்தநிலையில் அமீர் அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: