ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: இந்தியாவில் விரைவில் 3வது டோஸ் தடுப்பூசி?

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: இந்தியாவில் விரைவில் 3வது டோஸ் தடுப்பூசி?

ஒமிக்ரான் (Omicron) வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு  கூடுதல் தடுப்பூசியும் (Additional dose) ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு 2வது டோஸ் செலுத்தப்பட்ட சில மாதங்களுக்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் (Booster dose) செலுத்தப்படும் என்று தெரிகிறது.

மேலும் படிக்கவும் ...
 • 1 minute read
 • Last Updated :

  ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் சூழலில், இந்தியாவில் தற்காப்பு நடவடிக்கையாக 3வது தவணை தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 3 வாரங்களுக்குள் விரிவாக கொள்கை வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும்.

  தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா தற்போது குறைந்தது 17 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.  இது மிகவும் கவலையளிக்கும் கொரோனா வைரஸ் (Variant of Concern) என்று உலக சுகாதார  நிறுவனம் பெயரிட்டுள்ளது. ஒமிக்ரான் ( omicron) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

  இந்த வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றோருவருக்கு பரவும் தன்மை உடையது என்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக குறைந்த அளவே செயலாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா 3வது தவணை தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது.

  நிபுணர் குழு நாட்டில் மூன்றாவது தடுப்பூசி டோஸ் குறித்த கொள்கை குறிப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு கூடுதல் டோஸ் தேவையா? அல்லது ஆரோக்கியமானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவையா? மூன்றாவது டோஸ் எப்போது கொடுக்க வேண்டும்? அது கொடுக்கப்பட வேண்டும் என்றால், அது யாருக்கு வழங்கப்பட வேண்டும்? இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸுக்கு இடையே உள்ள இடைவெளி என்னவாக இருக்க வேண்டும் என்பவை குறித்து கொள்கை உருவாக்கத்தின்போது முடிவு செய்யப்படும்.

  இதையும் படிங்க: 44 கோடி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தயார் - 2 வாரங்களில் அறிவிப்பு வெளியாகிறது

  கிடைத்த தகவல்களின்படி, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு  கூடுதல் தடுப்பூசியும் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு 2வது டோஸ் செலுத்தப்பட்ட சில மாதங்களுக்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும் என்று தெரிகிறது.

  First published: