ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

லாக்டவுன்.. மாஸ்க்.. மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதல்வர் அவசர ஆலோசனை!

லாக்டவுன்.. மாஸ்க்.. மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதல்வர் அவசர ஆலோசனை!

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

COVID19: இந்தியா  முழுவதும் உருமாறிய ஒமிக்ரான் தொற்று குறித்து மத்திய மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீனாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா, இப்போது, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் கொரியா என சில நாடுகளிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. கொரோனா பரவல் அச்சத்தால் இந்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகதாரத்துறை செயலர் ராஜஸே் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா  முழுவதும் உருமாறிய ஒமிக்ரான் தொற்று குறித்து மத்திய மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தலைமைச்செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா அதிகரித்த தொடங்கினால் மாஸ்க் கட்டாயம், லாக்டவுன் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது

First published:

Tags: Corona, Corona spread