ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காங்கிரஸ் குறித்து விமர்சனம்: அமெரிக்கை நாராயணன் மீது கே.எஸ். அழகிரி நடவடிக்கை

காங்கிரஸ் குறித்து விமர்சனம்: அமெரிக்கை நாராயணன் மீது கே.எஸ். அழகிரி நடவடிக்கை

அமெரிக்கை நாராயணன்

அமெரிக்கை நாராயணன்

30 வருடமாக கட்சிக்கு சொந்தப் பணத்திலும் உழைப்பிலும் புகழ் சேர்த்த நான், காங்கிரஸ்  கொள்கைக்கு எதிராக பேசியது என்ன என்பதை தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி விளக்க வேண்டும் என்று அமெரிக்கை நாராயணன் ட்விட் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

5 மாநில தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் தலைமை குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, அவர் மீது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நடவடிக்கை எடுத்துள்ளார். பாஜக மற்றும் திகவை திட்டியதுதான் நடவடிக்கை எடுக்க காரணமா என்று அமெரிக்கை நாராயணன் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் அக்கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான  அமெரிக்கை நாராயணன், யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சியின் தலைமை சரி இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியில் இருந்து நேரு குடும்பத்தினர் விலக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

நேரு குடும்பம் காங்கிரஸில் இருந்து விலக வேண்டும் என்று இதற்கு முன்பு பாஜகவின் ஹெச்.ராஜா கூறியிருந்தார். எனினும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே கட்சி தலைமை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, காங்கிரஸ் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் நபர்கள் பட்டியலில் இருந்து அமெரிக்கை நாராயணன் நீக்கப்படுவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி  அறிவித்தார்.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட பதவிகளுக்கு மார்ச் 26ல் மறைமுகத் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இது தொடர்பாக அமெரிக்கை நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். விளக்கம் கேட்காமல், 30 வருடமாக கட்சிக்கு சொந்தப் பணத்திலும் உழைப்பிலும் புகழ் சேர்த்த நான், காங்கிரஸ்  கொள்கைக்கு எதிராக பேசியது என்ன என்பதை தமிழக தலைவர் அழகிரி விளக்க வேண்டும். கடந்த 3 நாட்களாக காங்கிரஸை காப்பாற்ற வேண்டும் என்றே பேசினேன் என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க: 2 ஆண்டுகளில் பாஜகவை வீழ்த்த முடியும்... காங்கிரஸ் செய்ய வேண்டியது என்ன? பட்டியலிட்ட தி.க. தலைவர்

மற்றொரு பதிவில்,  ‘என்னை நேரில் விளக்கம் கேட்காமல் சமூக தளத்தில் விளக்கம் கேட்டு காங்கிரஸ்  பிரச்சினையை, மக்கள் சமூக தளத்தில் விசாரிக்க வழிவகுத்த அழகிரியே!  பாஜகவின் லஞ்ச லாவண்யத்தை திக வை திட்டியதுதான், கட்சியை விட்டு விலக்கக் காரணமா?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

First published:

Tags: Congress, KS Alagiri