அமெரிக்காவில் கப்பலில் பணிபுரிந்த தமிழர் கொரோனாவால் வேலையிழப்பு - மனம் தளராமல் கரும்புச் சாறு விற்கிறார்

அமெரிக்காவில் சொகுசுக் கப்பலில் பணிபுரிந்த தமிழர் கொரோனாவால் வேலையிழந்த பின்னர், மனம் தளராமல் கரும்புச் சாறு விற்பனை செய்து வருகிறார்.

  • Share this:
அமெரிக்காவில் சொகுசுக் கப்பலில் கைநிறைய பணம் சம்பாதித்த மதுரையை சேர்ந்த நபர் கொரோனா எதிரொலியால் வேலையிழந்துள்ளார். இருப்பினும் மனம் தளராத அவர் நடமாடும் வாகனம் மூலம் கரும்புச் சாறு விற்பனை செய்து அதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பெரும் செல்வந்தர்கள் முதல் சாதாரண கூலித் தொழிலாளி வரை வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் வேலையிழந்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை புதூர் சூர்யா நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் சொகுசு கப்பலில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். அதன் மூலம் 2,400 டாலர் வருமானமாக பெற்று வந்தார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் ஊதியம் பெற்று வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊர் வந்த அவர் 2 மாதம் தங்கியிருந்தார். அதற்குள் அமெரிக்காவில் கொரோனா தொற்று வேகமாக பரவியதால், பலர் வேலையிழந்தனர். அதில் சரவணனும் ஒருவர். இருப்பினும் மனம் தளராத அவர், சுய தொழில் தொடங்குவது பற்றி தனது மனைவி நிஷாந்தியுடன் ஆலோசித்தார். இதையடுத்து நிஷாந்தியின் தோழி ஒருவரின் அறிவுரைப்படி சிறிய நடமாடும் சரக்கு வாகனத்தில் கரும்புச் சாறு கடை நடத்தி வருகிறார் சரவணன்.


இதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் வரை செலவானதாகவும் இதன் மூலம் ஓரளவு நல்ல வருமானம் கிடைப்பதாகவும் சரவணனின் மனைவி நிஷாந்தி தெரிவித்துள்ளார்.

இதே போல் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த திருப்பூர் மாவட்டம் சோளிபாளையம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி தனது இன்னோவா காரை நடமாடும் உணவகமாக மாற்றி உள்ளார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வீட்டின் அன்றாட செலவுகளை கவனித்து வருகிறார்.
கொரோனா கால நெருக்கடி உலகையே புரட்டிப் போட்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இருப்பினும் இதுபோன்ற கடினமான காலத்தில் மனம் தளராமல் கிடைத்த வாய்ப்புகளை இருவரும் சாதமாக பயன்டுத்தியது நம் அனைவருக்கும் ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறது.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading