ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒளிர்ந்த வண்ண விளக்குகள்

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒளிர்ந்த வண்ண விளக்குகள்

அமெரிக்க தூதரகம்

அமெரிக்க தூதரகம்

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெறும் போர் மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்துவருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. சுமார் மூன்று வாரங்களுக்கு மேலாக தொடரும் இந்தப் போர் உலக நாடுகளை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நிகழும் மிகப்பெரிய மோதலாக மாறியுள்ள ரஷ்ய - உக்ரைன் போரில் இருதரப்பினரும் பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

  போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துவருகிறது. ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா உதவி செய்துவருகிறது.

  இருப்பினும், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியா போரில் ஈடுபடவில்லை. இருந்தாலும் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறது.

  நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பாதியிலேயே நின்ற லிப்ட்- 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 11 பயணிகள் மீட்பு

  அதன் ஒரு பகுதியாக சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உக்ரைன் தேசிய கொடியை பிரதிபலிக்கும் வண்ண விளக்குகளை ஒளிரவிட்டுள்ளது. இதுகுறித்த அமெரிக்க தூதரகத்தின் ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவின் அமெரிக்க தூதரகம் உக்ரேனிய கொடியின் வண்ணங்கள் ஒளிர ஆதரவாக நிற்கிறோம். உக்ரேனின் சுதந்திரம், இறையாண்மை, மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு உறுதியானது’ என்று தெரிவித்துள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Chennai, Russia - Ukraine