விபத்தில் ஒரு காலை இழந்த குழந்தை... ₹ 90 ஆயிரம் பணம் திரட்டி உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்...!

news18
Updated: August 24, 2019, 8:54 AM IST
விபத்தில் ஒரு காலை இழந்த குழந்தை... ₹ 90 ஆயிரம் பணம் திரட்டி உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்...!
பாதிக்கப்பட்ட குழந்தையுடன் ராஜேந்திரன்
news18
Updated: August 24, 2019, 8:54 AM IST
மனிதாபிமானம் மரிக்கவில்லை என்பதற்கு உதாரணமாக  மானா மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான ராஜேந்திரன். சொந்தமாக வாடகைக்கு ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார்.

மானா மதுரை பகுதிகளில் எங்கு விபத்து நடந்தாலும் அங்கே முதலில் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சேர்த்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வரை மட்டும் அல்லாமல் மேல் சிகிச்சைக்கு அனுப்பி இருந்தாலும் அவர்களை தொடர்ந்து விசாரித்து கொண்டு இருப்பர் ராஜேந்திரன்.


தனது ஆம்புலன்சை பயன்படுத்துபவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்றதுபோல, பணம் வாங்கிக் கொள்கிறார். பணம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவே சேவையும் அளிப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

சில நாட்கள் முன் மானா மதுரையில் நடந்த விபத்து ஒன்றில் இரு குழந்தைகள் படுகாயம் அடைந்தன. அந்த குழந்தைகளை விபத்து நடந்த அன்று ராஜேந்திரன் தனது ஆம்புலன்ஸ்சில் தான் கொண்டு சென்றனர்.

இதனால், குழந்தைகளின் சிகிச்சை நிலை பற்றி தொடர்ந்து கேட்டறிந்து வந்துள்ளார். விபத்தில் அடிபட்ட ஒரு குழந்தையின் கால்கள். மிகவும் சிதைந்ததால் சிகிச்சையின் போது அகற்றப்பட்டது.

Loading...

இதனால், மனம் உடைந்த ராஜேந்திரன் குழந்தைகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு உதவ முன் வந்து, மதுரை சுற்றுலா வேன் டிரைவர்கள், நண்பர்கள் முலம் திரட்டிய 90 ஆயிரம் ரூபாய் பணம் திரட்டியுள்ளார்.

பணத்தை தலா 45 ஆயிரம் ரூபாய் வீதம் இரு குழந்தைகளுக்கும் அவர் பிரித்து கொடுத்துள்ளார். இதை கேள்விப்பட்ட பலர் சமுக வலைதளத்தில் ராஜேந்திரனின் சேவையை பாரட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக ராஜேந்திரன் கூறும் போது, “குழந்தைகள் பற்றி நினைத்தேன். அவர்கள் எவ்வளவு கனவுகள் உடன் இருந்து இருப்பார்கள். கால்களை இழந்த குழந்தைகளுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று எண்ணினேன். இதற்க்கு உதவிய மதுரை சுற்றுலா வேன் டிரைவர்கள் , நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...