சட்டப் படிப்புகளுக்கு ஜனவரி 6-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு - சட்டப் பல்கலைக்கழகம்

சட்டப் படிப்புகளுக்கு ஜனவரி 6-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக தேர்வு - சட்டப் பல்கலைக்கழகம்

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரியர் மாணவர்களின் நலன் கருதி அவர்களின் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சட்ட படிப்புகளுக்கு ஜனவரி 6 ம் தேதி முதல் பருவத் தேர்வுகளோடு சேர்த்து அரியர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படவுள்ளதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிட கோரி சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜனவரி 6ஆம் தேதி முதல் பருவத்தேர்வுகளோடு சேர்த்து அரிய தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

Also read... ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

அப்போது மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரியர் மாணவர்களின் நலன் கருதி அவர்களின் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதுவதால் அரியர் மாணவர்களுக்கான முடிவை மட்டும் தனியே வெளியிடுவதில் சிரமம் இருப்பதாகவும், எனினும் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: