• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அட்டகாசமான சலுகைகளுடன் அமேசான் கிரேட் இந்தியன் சேல் தொடங்கியது

அட்டகாசமான சலுகைகளுடன் அமேசான் கிரேட் இந்தியன் சேல் தொடங்கியது

கோப்புப் படம்.

கோப்புப் படம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமேசான் வருடாந்திர சலுகை விலை விற்பனை (Amazon Great Indian Sale) இன்று நள்ளிரவு 12 மணி அளவில் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி இரவு 11.59 வரை நடைபெறுகிறது.

    அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஒரு முறை ஸ்கிரீன் மாற்றித்தரப்படும் என அமேசான் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. இதனுடன், கூடுதலாக ரூ.1 செலுத்தி சேத பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அமேசான் நிறுவனம் முதல் முறை ஆர்டர் செய்யும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச டெலிவரியும் அறிவித்துள்ளது.



    இதில் அமேசான் நிறுவனம் ஒன் பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒன் பிளஸ் 6 மொபைலுக்கு ரூ.5000 சலுகை வழங்கி ரூ.29,999 பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அமேசான் கருவிகளான, ஸ்மார்ட் ஸ்பிக்கர்ஸ் (Speakers), ஃபயர் ஸ்டிக் (Fire Stick),அமேசான் கிண்டில் (Amazon Kindle) உள்ளிட்டவைகளும் இந்த கிரேட் இந்தியன் சேலில் இடம்பெறுகிறது. அமேசன் பையர் ஸ்டிக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹங்காமா, சோனி லைவ், யப் டிவி போன்றவற்றின் சிறப்பு ஆஃபர்களும் கிடைக்கின்றன.



    கிரேட் இந்தியன் சேலில் மற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பொருத்தவரையில், லேப்டாப்களுக்கு ரூ.55,000 வரை சலுகை கிடைக்கிறது. கேமராக்கள் இஎம்ஐ இல்லாமல் கிடைக்கிறது. பிரிண்டர்களுக்கு 50 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தவிர்த்து, அமேசான் இணையதளமானது டிவி மற்றும் வாஷிங் மெஷின்களுக்கு ஒரேநேரத்தில் டெலிவரி மற்றும் இன்ஸ்டாலேஷன் சர்வீஸையும் வழங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Saroja
    First published: