முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ராமஜெயம் கொலை வழக்கு.. 4 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை..!

ராமஜெயம் கொலை வழக்கு.. 4 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை..!

ராமஜெயம்

ராமஜெயம்

Ramajayam murder case | ராமஜெயம் கொலை வழக்கில் முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது திருச்சியில் இருந்த ரவுடிகள் மோகன் ராம், நரைமுடி கணேசன் உட்பட 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு திருச்சி மாஜிஸ்திரேட் அனுமதி அளித்ததன் பேரில், இன்று முதற்கட்டமாக மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது.

டெல்லியில் இருந்து வந்துள்ள தடய அறிவியல் துறை நிபுணர்கள் சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்தில் சோதனையை தொடங்கியுள்ளனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு சண்முகம் என்பவர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 12 பேருக்கு ஜனவரி 21ஆம் தேதி வரை உண்மை கண்டறியும் சோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை இந்த மாதம் இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: K.N.Nehru, Murder case