இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை - ரஜினி

news18
Updated: March 13, 2018, 9:49 PM IST
இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை - ரஜினி
ரஜினிகாந்த்
news18
Updated: March 13, 2018, 9:49 PM IST
நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆக மாறவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அரசியல் பிரவசத்துக்கு முன் ஆன்மிகப் பயணமாக இமய மலைக்கு செல்ல ரஜினிகாந்த்  திட்டமிட்டார். இதையடுத்து, ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவுக்கு சென்ற ரஜினி அங்குள்ள தியான மண்டபத்தில் தங்கினார். தொடர்ந்து அவர், டேராடூனுக்கு சென்றார். இந்நிலையில், ரிஷிகேஷிலுள்ள சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆசிரமத்துக்கு ரஜினிகாந்த் இன்று வந்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆக மாறவில்லை. எனது கட்சியின் பெயரை நான் இன்னும் அறிவிக்கவில்லை. எனவே, அரசியல் ரீதியான கருத்துகளை தெரிவிக்கமாட்டேன்.  என்னை நான் உணர்ந்து கொள்ளவே, இந்த ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

இரங்கல்:  தேனி குரங்கணி தீ விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. இதுதொடர்பாக, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் ரஜினிகாந்த்.

தயானந்த சரஸ்வதியின் ஆசிரமத்தில் 2 நாட்கள் தங்கவுள்ள ரஜினி, பின்னர் அங்கிருந்து அல்மோர் பகுதியிலுள்ள மகா அவதார் பாபாஜியின் குகைக்கு செல்ல உள்ளார்.
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்