• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • VK Sasikala | சசிகலா தினமும் ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலையில்லை: எடப்பாடி பழனிசாமி

VK Sasikala | சசிகலா தினமும் ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலையில்லை: எடப்பாடி பழனிசாமி

Youtube Video

தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ தினசரி வெளியாகி தமிழ் நாடு அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் தினமும் ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலையில்லை என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலின் போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக கூறிய வி.கே.சசிகலா, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கட்சித் தொண்டர்களிடம் பேசுவதுடன், அதுதொடர்பான ஆடியோ பதிவுகளையும் தினசரி வெளியிட்டு வருகிறார். கொரோனா அலை முடிந்தவுடன் நிச்சயம் உங்களை சந்திப்பேன் என்ற தனது தொலைபேசி ஆடியோ உரையில் தொண்டர்களிடம் கூறுகிறார். தொடக்கத்தில் சசிகலாவுடன் பேசுவது அமமுகவினர் தான் என்று விளக்கமளித்த அதிமுக தலைமை, ஒரு கட்டத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதாக கூறி 15 பேரை கட்சியில் இருந்து நீக்கியது.

    இந்த சர்ச்சைக்குப் பிறகும் சசிகலா ஆடியோ தினசரி வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தான், ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சசிகலா தினசரி ஆயிரம் பேரிடம் பேசினாலும் தங்களுக்கு கவலையில்லை எனத் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... திமுக அரசை விமர்சிக்கும் ஈபிஎஸ்.. அக்கறையா?

    இதனிடையே, விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலா மட்டுமல்ல, யாருடைய தயவும் அதிமுகவிற்கு தேவையில்லை என குறிப்பிட்டார்.



    முன்னாள் எம்.எல்.ஏ. கதிர்காமு உடன் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது. அதில், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக மீண்டும் ஒன்றிணையும் சமயத்தில், ஜெயலலிதாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக பேசியுள்ளார். இதனிடையே, சசிகலாவை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அமமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: