Home /News /tamil-nadu /

நான் பிஜேபி கிடையாது.. திராவிட கருத்துகள்தான் ஊறியுள்ளது: பாக்யராஜ்

நான் பிஜேபி கிடையாது.. திராவிட கருத்துகள்தான் ஊறியுள்ளது: பாக்யராஜ்

பாக்யராஜ் விளக்கம்

பாக்யராஜ் விளக்கம்

Director Bhagyaraj: பெரியார், அண்ணா, கலைஞர், ஜீவா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் கருத்துகள்தான் என்னுள் ஊறிப்போய் உள்ளது. அந்த கருத்துகளின் அடிப்படையில்தான் சினிமா எடுத்துள்ளேன் என்று பாக்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

    பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய  நிலையில்,  ‘நான் பிஜேபி கிடையாது, எனது மனதில் திராவிடத் தலைவர்களின் சிந்தனைகளே ஊறியுள்ளது’ என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட,  திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

    இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பாக்யராஜ், பிரதமரை வெளிநாடு செல்கிறார் என  குறை சொல்லிக்கொண்டே  இருக்கிறார்கள். ஆனால் இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி செல்கிறார் ? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார் என பார்ப்பேன். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள் என்று பேசியிருந்தார்.

    பாக்யராஜின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ இன்று காலை ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது குறை பிரசவத்தில்  பிறந்தவர்கள் என்று சொன்ன வார்த்தை ரொம்ப தப்பான அர்த்ததை உண்டுபண்ணியது என கேள்விப்பட்டேன்.

    இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளின் வலி தெரியுமா? பாக்யராஜ் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

    மாற்றுத்திறனாளிகள் என்பதற்கும் குறைபிரசவம் என்பதற்கும் தொடர்பு இல்லை. நான் தவறாக கூறியிருப்பேன் என யார் நினைத்தாலும் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுகொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    மேலும் படிக்க: மோடியை போன்றவர்கள் நாட்டுக்கு தேவை.. பிரதமரை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்: பாக்யராஜ் பேச்சு


    மேலும், ”நான் பிஜேபி கிடையாது. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் படித்து, தமிழ் மொழியில் சினிமா எடுத்து வருகிறேன். தமிழ்தான் சோறு போடுகிறது.  எனது மனதில் திராவிடத் தலைவர்களின் சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கிறது .



    பெரியார், அண்ணா, கலைஞர், ஜீவா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் கருத்துகள்தான் என்னுள் ஊறிப்போய் உள்ளது. அந்த கருத்துகளின் அடிப்படையில்தான் சினிமா எடுத்துள்ளேன். தமிழ்நாட்டுக்குள் தமிழ் தலைவர்கள் என்ற மனநிலையில் தான் இருந்து வருகிறேன். இதுவரை நான் எடுத்த படங்களில் அதுதான் எதிரொலித்து வருகிறது. இனி எடுக்கும் படங்களிலும் அதுதான் எதிரொலிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bhagyaraj, Director Bhagyaraj

    அடுத்த செய்தி