அதிமுகவுடன் முன்பு இருந்த மனவருத்தம் தற்பொழுது இல்லை.. மனம் திறந்த முன்னாள் எம்பி மைத்ரேயன்..

அதிமுகவில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் முன்பு இருந்த மனவருத்தம் தற்பொழுது இல்லை மனம் திறந்த அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்

அதிமுகவுடன் முன்பு இருந்த மனவருத்தம் தற்பொழுது இல்லை.. மனம் திறந்த முன்னாள் எம்பி மைத்ரேயன்..
அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்
  • Share this:
கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் உலா வர தொடங்கியது. இதுதொடர்பாக அவரிடம் விசாரித்த பொழுது யாரோ ஒருவர் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புவதற்கு பதில் சொல்ல முடியாது என கூறினார்.

அதேபோல தற்போது அதிமுகவில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் எனக் கூறியவர் முன்பு இருந்த மனவருத்தங்கள் தற்போது இல்லை எனவும் கூறினார். இதுபோன்ற தவறான தகவல்கள் அவ்வப்போது உலா வருகிறது. அதற்கெல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது சரியாக இருக்காது என்று கூறினார்.

மேலும் படிக்க...அமைதியாக ஆபத்தை விளைவிக்கும் இந்த 5 வெள்ளை உணவுகள்


மேலும் நான் எப்பொழுது பாஜகவில் இணைய போகிறேன் என்று உலா வந்த அந்த செய்தியின்படி, நான் இணையவில்லை என்றால் அது பொய்யான தகவல் என்று மக்களுக்கு புரிந்து விடும் என்று அவர் கூறினார்.
First published: August 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading