நான் நல்லா இருக்கேன்... செவிலியர்களுடன் ‘சத்ரியன்’ படம் பார்த்தேன் - விஜயகாந்த் ட்விட்!

நான் நல்லா இருக்கேன்... செவிலியர்களுடன் ‘சத்ரியன்’ படம் பார்த்தேன் - விஜயகாந்த்!

துபாயில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் தான் உடல் நலத்துடன் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் முன்பு போல தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சிகிச்சைக்காக அவர் அவ்வப்போது வெளிநாட்டிற்கு சென்று வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சென்னை திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைக்காக அவ்வப்போது தனியார் மருத்துவமனைக்குச் சென்று வருகிறார்.

  தேமுதிக பொதுக் கூட்டங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விஜயகாந்த் பெரும்பாலும் தவிர்த்து வந்த நிலையில், கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் மட்டும் பங்கேற்று வருகிறார். உடல் நலக்குறைவால் தொடர்ச்சியான மருத்துவ பரிசோதனைகள் செய்து சிகிச்சை எடுத்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மேல் சிகிச்சைக்காக ஆக.2ம் தேதி துபாய் சென்றார். அவருடன் அவரது இளைய மகன் சண்முகபாண்டியனும் சென்றுள்ளார்.

  இந்நிலையில், சிகிச்சைக்காக துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த், தான் நலமுடன் இருப்பதாக புகைப்படத்துடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  இதுதொடர்பாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, "நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், விஜயகாந்த் கூலிங் கிளாஸ், டி-ஷர்ட்டுடன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, கையில் ரிமோட்டுடன் டிவி பார்த்தப்படி இருக்கிறார். அவரை சுற்றி செவிலியர்கள் கூட்டமாக நிற்கின்றனர். தொடர்ந்து, விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் சென்னை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: