நான் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு விவசாயி.. என்னை மக்கள் எளிதில் சந்திக்க முடியும்: அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி

அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி

அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி ஓட்டு கேட்க செல்லும் போது பள்ளி சிறுவர்கள் முதியவர்கள் உள்ளிட்டோர் இரட்டை இலை சின்னத்தை கையில் எடுத்து சென்றனர்.

 • Share this:
  திருச்சியில்  மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர்  பரஞ்ஜோதி, அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் டி.பி. பூனாட்சியின்  கிராமமான நெய்வேலியிலிருந்து  தனது தேர்தல் பிரச்சாரத்தை  தொடங்கினார். அப்பகுதியில் அவர் வாக்கு  சேகரிக்கும் போது அப்பகுதி மக்களிடம் பேசினார்.

  அப்போது,”  என்னை எப்போது வேண்டுமானாலும்  எளிதில் நீங்கள் சந்திக்கலாம். மாற்றுக் கட்சி வேட்பாளரை  அவ்வளவு எளிதில் சந்திக்க முடியாது. மற்றவர்கள்  வாக்காளர்களை விலை பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் சாதாரண குடும்பத்தில் பிறந்த  ஒரு விவசாயி. என்னை எப்போது வேண்டுமானாலும் எளிதில் சந்திக்கலாம். என்னை யாரும் விலைபேச முடியாது.  மக்களின் தேவைகள் அனைத்தையும் அறியக் கூடியவன் நான்” என்று கூறினார்.

  அதனைத் தொடர்ந்து பேசியவர், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பொங்கல் திருவிழாவின் போது முதல்வர் எடப்பாடி  பழனிசாமி மக்களுக்கு ரூ. 2,500 யை வழங்கி அனைவரையும் ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினர். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி குணசீலம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2500க்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான நீர் காவிரியில் இருந்து கொண்டு வருவதற்காக ஏற்பாடு செய்வேன்” என்று தெரிவித்தார்,

  அதன் பிறகு ”மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுப்பேன். நான் எளிமையானவன் என்றும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பொதுமக்களை கேட்டுக் கொண்டார்”.

  பள்ளி சிறுவர்கள் விடுமுறை என்பதால் அவர்கள் கையிலும் இரட்டை இலை பொருத்திய சின்னத்தை எடுத்துக் கொண்டு வாக்கு சேகரித்தனர்.


  இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சித்தாம்பூர், காவேரிபாளையம், தண்டலை, அழகம்பெருமாள் பட்டி, மணலி  அய்த்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி தனது பிரச்சாரத்தை  மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் சென்ற  அப்பகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு  கிராமங்களில் வயதானவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

  மேலும் படிக்க... எல்லா வளமும் இருந்தும் வலிமையற்று இருக்கிறோம் - சீமான்

  அதேபோன்று பள்ளி சிறுவர்கள் விடுமுறை என்பதால் அவர்கள் கையிலும் இரட்டை இலை பொருத்திய சின்னத்தை எடுத்துக் கொண்டு அதிமுகவிற்கு வாக்கு சேகரித்தனர். இந்த பிரச்சாரத்தின்  போது அதிமுக முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி  முசிறி ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வகள் உடனிருந்தனர்.

  செய்தியாளர்: கதிரவன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: