ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜகவுடன் அதிமுக இணக்கமாக இருந்தாலும் கொள்கை ரீதியாக முரண்பாடுகள் உள்ளன: கடம்பூர் ராஜூ

பாஜகவுடன் அதிமுக இணக்கமாக இருந்தாலும் கொள்கை ரீதியாக முரண்பாடுகள் உள்ளன: கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

தமிழ்நாட்டின் நிலைக்கு ஏற்ப பாஜக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என நல்ல ஆலோசனையை தான் பொன்னையன் வழங்கி உள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாஜகவுடன் அதிமுக இணக்கமாக இருந்தாலும் கொள்கை ரீதியாக முரண்பாடுகள் உள்ளன என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 66 உறுப்பினர்களுடன் வலுவான எதிர்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. அதிமுக எதிர்கட்சி தலைவரின் கருத்துக்களை விமர்சிப்பதாலேயே அமைச்சர் தங்கம் தென்னரசுவின் செய்தி பத்திரிகைகளில் வருகிறது. அவர் அதிமுகவுக்கு தான் நாளும் பொழுதும் பதில் அளித்து வருகிறார்.

  இதிலிருந்து அதிமுகவை பார்த்து திமுக பயப்படுகிறது என்று அர்த்தம். 2024-ல் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. அப்போது களத்தில் அவர்கள் இல்லாமல் போவார்கள். பாஜகவுடன் அதிமுக இணைக்கமாக இருந்தாலும் கொள்கை ரீதியாக முரண்பாடுகள் உள்ளன.

  அந்த முரண்பாடுகள் எங்களுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கு எதிரான உள்ள முரண்பாடுகளை அவர்கள் நீக்கிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை தான் பொன்னையன் தனது அனுபவத்தின் வாயிலாக சொல்லியிருக்கிறார்.

  Read More : மதுஅருந்துவதில் தகராறு.. லாரியை ஏற்றி இருவர் கொலை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

  அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் எதிரான கருத்தை அவர் கூறவில்லை. தமிழ்நாட்டின் நிலைக்கு ஏற்ப பாஜக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என நல்ல ஆலோசனையை தான் அவர் வழங்கி உள்ளார்.

  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வரின் கவனத்துக்கு செல்கிறதா என்பது தெரியவில்லை. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று முதல்வர் கூறுகிறார். சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தெரிந்து கொண்டு கூறினால் அரசியலுக்காக என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தெரியாமல் கூறினால் தமிழகத்துக்கு பெரிய ஆபத்து. எனவே, சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும்.

  அதிமுக, திமுக ஆகிய கட்சியில் மாவட்ட செயலாளர்கள் அதிகாரம் உண்டு. அதிமுக ஜனநாயக கட்சி. திமுகவை போன்று குடும்ப கட்சி கிடையாது. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் என்பதை அடையாளம் காட்டுகின்றனர். அதிமுகவில் குடும்பத்துக்கோ, வாரிசுக்கோ இடமில்லை. அடிமட்டத்திலிருந்து வந்த தொண்டர்கள் இருவர் முதல்வரானது வரலாற்றிலேயே அதிமுகவில் தான் நடந்துள்ளது, என்று அவர் கூறினார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: ADMK, Kadambur raju