நிவர் புயலால் புதுச்சேரியில் 50க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ள போதிலும், மரங்கள் மற்றும் பயிர்கள் அழிந்துள்ளதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.
புதுச்சேரி - மரக்காணம் இடையே நிவர் புயல் கரையைக் கடந்தது. இதனால் 42 ஆண்டுகளுக்கு பிறகு அதி கனமழையை புதுச்சேரி கண்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 30 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1978ம் ஆண்டு, நவம்பர் 4-ம் தேதி 32 சென்டி மீட்டர் மழை பதிவானது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், புதுவையில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரி, பர்கூர் ஏரிகள் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கின்றன.
ஊசுட்டேரியின் கொள்ளளவான 13 அடியில், 8 அடி அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது. இதேபோல் 50க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர் நிரம்பியுள்ள சூழலில், புதுச்சேரியின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
இதனிடையே 110 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிள்ளையார்குப்பம் படுகை அணை முறையாக பராமரிக்கப்படாததால் மழை நீர் முழுவதும் வீணாய் கடலில் கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த படுகை அணையை நம்பி 20-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் உள்ள நிலையில் மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிக தீர்வு மட்டுமே செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
நீர்நிலைகள் நிரம்பியுள்ள போதிலும், நிவர் புயலால் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால் ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கி விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Also read... மதுராந்தகம் ஏரி நிரம்பியது - கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில், 4 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தண்ணீர் வடியத் தொடங்கி உள்ளது. கடலூர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள், நிவர் புயலால் சேதம் அடைந்தன.
சீர்காழி அருகே உள்ள அல்லிவிலாகம், காத்திருப்பு, செம்பதனிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த பொங்கல் கரும்பு, நிவர் புயல் காரணமாக சாய்ந்துள்ளது. இந்த கரும்புகளை விவசாயிகள் சாலையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.