Home /News /tamil-nadu /

ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் தோல்வியடைந்தார்கள்: நான் கோபாலபுரத்துக்காரன்.. உதயநிதி ஸ்டாலின்

ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் தோல்வியடைந்தார்கள்: நான் கோபாலபுரத்துக்காரன்.. உதயநிதி ஸ்டாலின்

ஆழ்வார்பேட்டையில் குடியிருந்தாலும் தான் எப்போதும் கோபாலபுரத்துக்காரன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதயநிதி 1,200 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஆழ்வார்பேட்டையில் இருந்து நான் ஜார்ஜ் கோட்டைக்கு சென்றதாக முன்பு பேசியவர் சொன்னார். அதில் தவறு இருக்கிறது. ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து இருக்கிறார்கள்.

    ஆனால் தன்னுடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருந்தாலும் தான் பிறந்தது எல்லாமே கோபாலபுரம் தான். தான் எப்போதும் கோபாலபுரத்துக்காரன். கருணாநிதியின் பேரன் என்பதில் பெருமை கொள்வதாக கூறினார். தமிழகத்தில் தடுப்பூசி பெருமளவில் செலுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார்.

    இந்தியாவில் சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பதில் பெருமையில்லை இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி