கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைத் தவிர பிற இடங்களில் டாஸ்மாக் பார் இயங்க அனுமதி

டாஸ்மாக் பார்

பார்களுக்கு வரும் வாடிக்கையாளர் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணையும் பார் ஒப்பந்ததாரர் பதிவு செய்ய வேண்டும்.

 • Share this:
  தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நாளை முதல் டாஸ்மாக் பார் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பார்களுக்கு வரும் வாடிக்கையாளர் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணையும் பார் ஒப்பந்ததாரர் பதிவு செய்ய வேண்டும் என்றும், நோய் அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பார்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

  பார்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், பார்களில் இருக்கும்போது சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், பார்களின் நுழைவு வாயிலில் சனிடைசர் வைக்க வேண்டும், ஒவ்வொருவருக்கும் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பாரில் பொது இடங்களில் கை கழுவும் வசதியும் சானிடைசர் களும் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  Published by:Suresh V
  First published: