Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு சிறப்பு சலுகை..! - தமிழக அரசு உத்தரவு

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு சிறப்பு சலுகை..! - தமிழக அரசு உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

SETC : அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படுக்கை வசதிகள் கொண்ட குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் போதே 1LB, 4LB ஆகிய படுக்கைகளை பெண்களுக்கென ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாத போது அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் எனவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Must Read : கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளை ஆங்காங்கே வெட்டி நூதன மோசடி - சேலத்தில் பரபரப்பு

எனினும், பேருந்து புறப்படும் இறுதி நேரம் வரையில் அந்த இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Govt Bus, SETC, TN Govt, TNSTC, Women, Women Care