அர்ஜூனமூர்த்தி கட்சிக்கு ரோபோ சின்னம்?

அர்ஜூனமூர்த்தி கட்சிக்கு ரோபோ சின்னம்?

ரஜினிகாந்த் - அர்ஜூன மூர்த்தி

ரஜினி கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினாலும் அர்ஜுன மூர்த்தி அவரை மானசீக தலைவராக கொண்டு இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை தொடங்கினார்.

  • Share this:
    ரஜினியால் அறிமுகமான அர்ஜூன மூர்த்தி தொடங்கிய இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி தொடங்கி 234 தொகுதிளில் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். பின்னர் உடல் நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் தனது முடிவை திரும்ப பெற்றார். ரஜினி தொடங்கவிருந்த கட்சிக்கு அர்ஜூன மூர்த்தியை நிர்வாகியாக அறிவித்திருந்தார்.

    ரஜினி கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினாலும் அர்ஜுன மூர்த்தி அவரை மானசீக தலைவராக கொண்டு இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை தொடங்கினார். புதிய கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்திக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அர்ஜூ மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ரோபோ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ரோபோ சின்னமே அர்ஜூன மூர்த்திக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

     
    Published by:Vijay R
    First published: