ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''மருது சகோதரர்களை காட்டிக் கொடுத்த ஒய்யா தேவர் போன்றவர் அண்ணாமலை'' - திருமாவளவன் பேச்சு

''மருது சகோதரர்களை காட்டிக் கொடுத்த ஒய்யா தேவர் போன்றவர் அண்ணாமலை'' - திருமாவளவன் பேச்சு

திருமாவளவன்

திருமாவளவன்

தலித்துகளை தனிமைப்படுத்த பஞ்சுமிட்டாய் தலைகள் என்று பாமக ராமதாஸ் கூறுவார். அவர் வாயை அடைத்த இயக்கம் விடுதலைச் சிறுத்தை இயக்கம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karaikkudi (Karaikudi), India

  மருது சகோதரர்களை ஆங்கிலேயர்களுக்கு காட்டி கொடுத்த ஒய்யா தேவர் போன்றவர் அண்ணாமலை என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மருது சகோதரர்கள் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  இதில் சிறப்புரையாற்றிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “மாமன்னர் மருது சகோதரர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி.  மருது சகோதரர்கள், ஆங்கிலேயரை எதிர்ப்பவர்களுடன் கூட்டு வைத்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வென்றனர். அதேபோல பாஜக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை எதிர்ப்பதற்கு கூட்டு பலம் தான்  வலிமையானது. தேர்தலில் தனியாக தான் நிற்பேன் என்பவர்கள் அரிச்சுவடி அரசியல்வாதிகள். தனித்துவம் என்பது வேறு, தனிமைப்படுவது என்பது வேறு. தனித்துவத்தை பாதுகாக்கவேண்டும் தனிமைப்பட்டு விடக்கூடாது, கூட்டு பலம் என்பதன் வலிமையிலும் வலிமையானது. தலித்துகளை தனிமைப்படுத்த பஞ்சுமிட்டாய் தலைகள் என்று பாமக ராமதாஸ் கூறுவார். அவர் வாயை அடைத்த இயக்கம் விடுதலைச் சிறுத்தை இயக்கம்”

  Exclusive: "அடங்கி இருக்கணும்.. எரிமலையை எதிர்கொள்வேன்".. முரசொலி கட்டுரைக்கு காட்டமாக பதிலளித்த தமிழிசை! (news18.com)

  தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக, திமுக போட்டியில் பாஜகவால் நுழைய முடியவில்லை. ஆனால் தற்போது ஜெயலலிதா இறந்த பிறகு நுழைந்து விட்டார்கள். தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என்ற நிலையில் அதிமுக உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜக உள்ளே நுழைந்து விட்டது. தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் வேடிக்கை அரசியலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.”

  மேலும், “ மருது சகோதரர்களை ஆங்கிலேயர்களுக்கு காட்டி கொடுத்த ஒய்யா தேவர் போன்றவர் அண்ணாமலை. அவர் பதவிக்காக காட்டிக் கொடுப்பவர்” என காட்டமாக விமர்சித்தார்.

  - முத்துராமலிங்கம், காரைக்குடி, செய்தியாளர்

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Thirumavalavan, VCK