தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகிவிட்டது: முரளிதரராவ் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என முரளிதரராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

News18 Tamil
Updated: February 12, 2019, 9:35 PM IST
தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகிவிட்டது: முரளிதரராவ் அறிவிப்பு
பாஜக கொடி
News18 Tamil
Updated: February 12, 2019, 9:35 PM IST
தமிழகத்தில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும்,  இது குறித்து இன்னும் ஒரு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் மத்திய அரசு அமைத்துள்ள நிலையில், மீனவர்கள் சார்ந்த பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது தொடர்பாக பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதரராவ் புதுச்சேரி மாநில மீனவர்களிடம் கருத்துகளை கேட்டார்.

பூரணாகுப்பம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முரளிதரராவ், ”கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது போல, இந்த தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில்
தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது என தெரிவித்த அவர், தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. இன்னும் ஒருசில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வகமாக அறிவிக்கப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்” என முரளிதரராவ் தெரிவித்தார்.
First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...