பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் மோசடி - மனநலம் பாதித்த பெண்ணுக்கு வரவேண்டிய பணம் கையாடல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Share this:
முறைகேட்டின் உச்சமாக, மனநலம் பாதித்த தாயை வைத்துக் கொண்டு சிரமப்படும் சிறுவனுக்கு சேர வேண்டிய பணத்தையும் எடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நெக்னாமலை ஊராட்சி புருஷோத்தமன் குப்பத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்கிற ராகுல் காந்தி, 8ம் வகுப்பு படித்து வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன் தந்தை சுப்பிரமணி மரணமடைய

அதன்பின்னர் தாய் அய்யம்மாளுக்கு மனநலம் பாதித்துள்ளது. அக்கம் பக்கத்தினர் கொடுக்கும் உதவியை வைத்துக்கொண்டு தாயை பராமரித்து வருகிறார் ராகுல் காந்தி. இந்நிலையில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதாக கூறி ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை வாங்கிச்சென்று சிறுவனை ஏமாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

அய்யம்மாள் வீட்டிற்கு சேர வேண்டிய தொகையை, முன்னாள் ஊராட்சி மன்ற செயலர் வஜ்ஜிரவேலு, அவரது உறவினர்களின் கணக்கிற்கு மாற்றிவிட்டதாகவும், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் பதில் இல்லை என அக்கம்பக்கத்தார் வேதனைபடுகின்றனர். இதனால் சிறுவனும், மனநலம் பாதித்த தாயும் வெயில் காலங்களில் வீட்டிற்கு வெளியேயும், மழைக்காலங்களில் யாருடைய வீட்டிலாவது காலம் கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.Also read... கொரோனா பாதிப்பால் காவலர் உயிரிழப்பு - சென்னை காவல்துறையில் மூன்றாவது மரணம்

இதே பகுதியை சேர்ந்த மேலும் 7 பேர், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு 2017-18ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு, 1,70,000 ரூபாய் தருவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு அவசர அவசரமாக இடிக்கப்பட்ட இவர்களின் வீடுகளும் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது.

இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து முறைகேடு புகார் எழுந்துவரும் சூழலில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading